வரலாறு காணாத போதைப் பொருள் நடமாட்டம்; அரசு தடுக்கவில்லை - தினகரன் கண்டனம்!

Tamil nadu Chennai TTV Dhinakaran Drugs
By Swetha Mar 02, 2024 09:06 AM GMT
Report

பொதுமக்களை அச்சுறுத்தும் போதை பொருட்கள் மற்றும் மதுபானக் கடைகளை அகற்ற கோரி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

டிடிவி தினகரன்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "வேலூர் மாவட்டம் காகிதப்பட்டறை பகுதியில் ஒரே தெருவில் இயங்கும் ஆறு மதுபானக் கடைகளால் அதிகரிக்கும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் - பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும் மதுபானக் கடைகளை அகற்ற தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வரலாறு காணாத போதைப் பொருள் நடமாட்டம்; அரசு தடுக்கவில்லை - தினகரன் கண்டனம்! | Steps Should Be Taken To Remove Drugs Dhinakaran

வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள்தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த 22 தொகுதிகள் வேண்டும் - லிஸ்ட் போட்டு கொடுத்த டிடிவி தினகரன் - என்ன செய்யும் பாஜக..?

இந்த 22 தொகுதிகள் வேண்டும் - லிஸ்ட் போட்டு கொடுத்த டிடிவி தினகரன் - என்ன செய்யும் பாஜக..?

வலியுறுத்தல் 

மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

வரலாறு காணாத போதைப் பொருள் நடமாட்டம்; அரசு தடுக்கவில்லை - தினகரன் கண்டனம்! | Steps Should Be Taken To Remove Drugs Dhinakaran

வீதிக்கு வீதி திறக்கப்பட்டிருக்கும் மதுக்கடைகளால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதோடு, தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்திருக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் நடமாட்டத்தை அரசு தடுக்க தவறியதன் விளைவாக நேற்று ஒரே நாளில் மட்டும் மதுரை மற்றும் சென்னையில் ரூ.180 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆகவே, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.