எங்களை உலுக்கிவிட்டது - கேப்டனை மாற்றியது மிக பெரிய தவறு - பிளெம்மிங் ஆதங்கம்..!

Karthick
in கிரிக்கெட்Report this article
இன்று IPL தொடர் துவங்குகிறது.
IPL
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதாக எதிர்பார்த்து காத்திருந்த IPL தொடர் இன்று கோலாகலமாக துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை அணியும் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டியை காண ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், நேற்று சென்னை அணி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார் தோனி.
கேப்டன்ஷிப்பில் பதவியில் இருந்து விலகிய அவர், இப்பதிவியை இளம் வீரரான ருதுராஜ் கெய்க்வாட்'டிற்கு அளித்துள்ளார்.
சென்னை அணி மட்டுமின்றி கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சென்னை அணி கேப்டன் மாற்றம் தொடர்பாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
உலுக்கிவிட்டது
சில ஆண்டுகளுக்கு முன்பு கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகும் முடிவை எடுத்தபோது அதனை எதிர்கொள்ள தாங்கள் தயாராக இல்லை என குறிப்பிட்டு, அவரின் முடிவு எங்களை உலுக்கிவிட்டது என்று தெரிவித்தார்.
கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகி ஜடேஜா கேப்டனான போது நிகழ்ந்த தவறுகள் எதுவும் மீண்டும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதில் தற்போது உறுதியாக இருந்தோம் என்று கூறி,
இளம் வீரர் ருதுராஜ் மெருகேறி கேப்டனாகி இருப்பதை நினைத்து பெருமைகொள்கிறோம் என்றும் இது தோனி மட்டுமே எடுத்த முடிவல்ல என சுட்டிக்காட்டினார்.
குழுவாக ஆலோசித்துதான் இம்முடிவிற்கு வந்துள்ளதாக தெரிவித்து, வருங்காலத்தை மனதில் வைத்து எடுக்கப்பட்ட முடிவு இது என்றும் புதிய கேப்டனை மெருகேற்றுவதற்கான சரியான நேரம் இது என பிளெம்மிங் பகிர்ந்து கொண்டார்.