IASஅதிகாரியின் 2வது மனைவி - மகனும் மருமகனும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தல்!

Sexual harassment India Jammu And Kashmir Crime
By Swetha Jul 12, 2024 08:05 AM GMT
Report

வளர்ப்பு மகனும் மருமகனும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.

பாலியல் வன்கொடுமை

ஜம்மு மற்றும் காஷ்மீரின் காஜிப்பூர் பகுதியில் காவல் நியைத்திற்கு உட்பட்ட இடத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி. இவருக்கு முதல் திருமணத்தின் வழியே 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

IASஅதிகாரியின் 2வது மனைவி - மகனும் மருமகனும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தல்! | Step Son Son In Law Raped Ias Officers 2Nd Wife

இந்த நிலையில், அந்த அதிகாரி 2-வது திருமணம் செய்து கொண்டார். உத்தர பிரதேசத்தின் லக்னோ நகரை சேர்ந்த அந்த பெண்ணுக்கு 40 வயது ஆகிறது. இந்த சூழலில், அவர் பரபரப்பு புகார் ஒன்றை போலீசில் தெரிவித்து உள்ளார்.

சிறுமியை நிர்வாணப்படுத்துவது பாலியல் வன்கொடுமை முயற்சியல்ல - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

சிறுமியை நிர்வாணப்படுத்துவது பாலியல் வன்கொடுமை முயற்சியல்ல - நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

2வது மனைவி

அதில், திருமணம் ஆன நாளில் இருந்து, 2-வது மனைவியை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்த தொடங்கியுள்ளனர். அவர், இதற்கு மறுத்ததும், அதிகாரியின் மூத்த மனைவியின் வாரிசுகள் கடுமையாக அடித்து, தாக்கியுள்ளனர்.

IASஅதிகாரியின் 2வது மனைவி - மகனும் மருமகனும் பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தல்! | Step Son Son In Law Raped Ias Officers 2Nd Wife

கடந்த ஏப்ரலில், வளர்ப்பு மகனும், மருமகனும் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு வன்கொடுமை செய்துள்ளனர். அந்த காலகட்டத்தில் அவருக்கு உணவு எதுவும் கொடுக்காமல் கொடுமை செய்துள்ளனர். அந்த பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் வன்கொடுமை சம்பவங்களை வீடியோ எடுத்து வைத்து கொண்டனர்.

வெற்று காகிதத்தில் கையெழுத்தும் வாங்கி வைத்து கொண்டனர். பெண்ணின் உடல்நலம் மோசமடைந்ததும் பெற்றோர் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றனர்.