வந்ததும்.. காந்தி, அம்பேத்கர் சிலையில் கைவைத்த அரசு - நாடாளுமன்றத்தில் வெடிக்கும் சர்ச்சை!
நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி, அம்பேத்கர் சிலைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம்
மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் நரேந்திர மோடி தற்போது மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளார்.
அந்த வகையில், மக்களவை விரைவில் கூடுவதையொட்டி புதிய எம்பிக்கள் பதவி ஏற்கவுள்ளனர். இதனால் நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
சிலைகள் இடமாற்றம்
அதில், அங்கு வளாகத்தில் அமைந்திருந்த அண்ணல் அம்பேத்கர், மகாத்மா காந்தி, சத்ரபதி சிவாஜி உள்ளிட்டோர் சிலைகள் அகற்றப்பட்டுள்ளன. அவை ழைய நாடாளுமன்ற கட்டிடம் அருகே உள்ள புல்வெளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இந்த இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,
“சத்ரபதி சிவாஜி மகாராஜ், மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோரின் சிலைகள் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முக்கிய இடங்களில் இருந்து அகற்றப்பட்டுள்ளது, கொடுமையானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.