இறந்த எலிகளுக்கு சிலைகள் வைக்கும் நாடு - இப்படி ஒரு காரணமா?
உயிரிழந்த எலிகளுக்கு சிலை வைக்கும் நாடு குறித்து பார்க்கலாம்.
எலிக்கு சிலை
நோய்களுக்கு மருந்து கண்டறிவது, உயிரியல் சார்ந்த ஆராய்ச்சி மேற்கொள்ளுவது என பல்வேறு விதமான ஆராய்ச்சிகளுக்கு ஆய்வு கூடங்களில் எலிகள் பயன்படுத்தப்படுகிறது.
அதன்படி, மருந்துகள் முதற்கட்டமாக எலிகளுக்கு தரப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படும். இதன்மூலம், மருந்தின் செயல் திறன் அறியலாம். எலியின் எடை, குறுகியக் கால வாழ்க்கை சுழற்சி, எளிமையான பராமரிப்பு முறை போன்றவை எலிகளை ஆராய்ச்சிக்குட்படுத்த ஏதுவாக அமைகிறது.
எங்களை பார்த்தால் எலிக்கு பயமில்லை... 581 கிலோ கஞ்சாவை எலி சாப்பிடுச்சு... - உ.பி. போலீசார் குற்றச்சாட்டு...!
கவுரவிக்கும் செயல்
மேலும், மனித உயிர்களுக்கு ஏற்றால்போல், எலிகளின் உடற்கூறியல், உடலியல் மற்றும் மரபணு உள்ளது. இந்நிலையில், இவ்வாறு பல்லாயிரம் கணக்கில் ஆய்வுக் கூடங்களில் உயிரிழக்கும் எலிகளை நினைவுக்கூறும் அல்லது கவுரவிக்கும் வகையில், ரஷ்யாவில் சிலை வைக்கப்பட்டுள்ளது.
நோவோசிபிர்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள, சைட்டாலஜி மற்றும் மரபியல் கல்வி நிறுவனத்தில் இந்த எலி சிலை வைக்கப்பட்டுள்ளது. இது உலகளவில் கவனம் பெற்றுள்ளது.