பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை..விழுந்து உடைந்ததால் பரபரப்பு! என்ன நடந்தது!
மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவாஜி சிலை..
கடற்படை தினத்தையோட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது.
விழுந்து உடைந்து
இதற்கு பலத்த காற்றே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது பல சர்ச்சைகளை கிளம்பி உள்ளது.
சத்ரபதி சிவாஜி சிலையை முறையாக பராமரிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.