பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை..விழுந்து உடைந்ததால் பரபரப்பு! என்ன நடந்தது!

Narendra Modi India Maharashtra
By Swetha Aug 27, 2024 06:51 AM GMT
Report

மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை விழுந்து உடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 சிவாஜி சிலை..

கடற்படை தினத்தையோட்டி, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மகராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் சத்ரபதி சிவாஜியின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை..விழுந்து உடைந்ததால் பரபரப்பு! என்ன நடந்தது! | Statue Of Chatrapati Sivaji Collapsed Maharashtra

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் கனமழை பெய்து வந்தது. இதனிடையே கடந்த திங்கட்கிழமை 35 அடி உயர சத்ரபதி சிவாஜி சிலை பல துண்டுகளாக உடைந்து கீழே விழுந்தது.

பாலம் உடைந்து கோர விபத்து; தீப்பிடித்து எரிந்த கப்பல் - உள்ளே 22 இந்திய மாலுமிகள்!

பாலம் உடைந்து கோர விபத்து; தீப்பிடித்து எரிந்த கப்பல் - உள்ளே 22 இந்திய மாலுமிகள்!

விழுந்து உடைந்து 

இதற்கு பலத்த காற்றே காரணம் எனக் கூறப்படுகிறது. இந்த சூழலில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை ஓராண்டுக்குள் இடிந்து விழுந்தது பல சர்ச்சைகளை கிளம்பி உள்ளது.

பிரதமர் மோடி திறந்து வைத்த சத்ரபதி சிவாஜி சிலை..விழுந்து உடைந்ததால் பரபரப்பு! என்ன நடந்தது! | Statue Of Chatrapati Sivaji Collapsed Maharashtra

சத்ரபதி சிவாஜி சிலையை முறையாக பராமரிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், இது குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.