ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை வீரர்கள்? 3-வது இடத்தில் தமிழகம் - லிஸ்ட்ல பின்னாடி இருக்கும் குஜராத்
இன்று பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் கோலாகலமாக துவங்கியுள்ளது ஒலிம்பிக் தொடர்.
ஒலிம்பிக் தொடர்
ஒவ்வொரு விளையாட்டு வீரரும் பெரிதாக நினைக்கும் ஒரு போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். உலக நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் பலரும், 3 பதக்கங்களுக்காக போட்டி போடுவார்கள்.
அப்படி ஒரு அசாத்திய மதிப்பு ஒரு போட்டியாக உள்ளது ஒலிம்பிக். இந்த ஆண்டின் ஒலிம்பிக் தொடர், பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் இன்று கோலாகலமாக துவங்குகிறது. ஆகஸ்ட் 11 ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதில் 206 நாடுகளை சேர்ந்த 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் களம் இறங்குகிறார்கள். வழக்கமாக மைதானத்தில் நடைபெறும் தொடக்க விழா இந்த முறை செய்ன் நதியில் நடைபெற உள்ளது. இதில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கு படகுகள் அணிவகுப்பு நடக்கிறது.
இந்த அணிவகுப்பில் ஒவ்வொரு நாடுகளையும் சேர்ந்த வீரர்கள் படகுகளில் தங்கள் தேசிய கொடியுடன் நின்று கலந்து கொள்ளவுள்ளனர். இந்தியா சார்பாக பி.வி.சிந்து மற்றும் சரத் கமல் இருவரும் தேசியக் கொடியை ஏந்த உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஒலிம்பிக் தங்கம் என்பது பெரிய கனவாகவே உள்ளது.
1900-ஆம் ஆண்டில் இருந்து ஒலிம்பிக் தொடரில் பங்கேற்று வரும் இந்தியா இது வரை 10 தங்கம் மட்டுமே வென்றுள்ளது. கடைசியாக 2021-ஆம் ஆண்டில் தங்கம் வென்றிருந்தார் நீரஜ் சோப்ரா.
மாநில வாரியாக...
இம்முறை எத்தனை பதக்கங்களை இந்தியா கைப்பற்றும் என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். இந்தியாவில் இருந்து மொத்தமாக 137 வீரர்கள் பங்கேற்கிறார்கள். அதில் அதிகபட்சமாக ஹரியானாவில் இருந்து மட்டும் 24 வீர - வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இரண்டு இடத்தில் பஞ்சாப் மாநிலம் உள்ளது.
19 வீரர்கள் பங்கேற்கிறார்கள். 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. நம் மாநிலத்தில் இருந்து 13 பேர் பங்கேற்கிறார்கள்.
உத்திரபிரதேசம் கர்நாடகாவில் இருந்து 7 பேர், கேரளா - 6,மகாராஷ்டிரா - 5, ஆந்திர பிரதேசம், டெல்லி, உத்திரகாண்ட் தெலுங்கானா தலா - 4, மேற்குவங்கம் - 3, மணிப்பூர், ஒடிஷா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சண்டிகர் தலா - 2, ஜார்கண்ட், அசாம், பீகார், சிக்கிம், கோவா தலா - 1 என வீரர்கள் பங்கேற்கிறார்கள்.