கொரோனா எதிரொலி: மாஸ்க் அணிவது கட்டாயம் - அரசு அதிரடி!
கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா
சீனா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவி வரும் நிலையில் இந்தியாவிலும் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் மத்திய அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறித்தப்பட்ட நிலையில் தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா,ராஜஸ்தான் என பல்வேறு மாநில அரசுகள் அதை துரிதப்படுத்தியுள்ளன.
மாஸ்க் அவசியம்
அதன்படி, கர்நாடக அரசு, உணவகங்கள், மால்கள் ஆகிய இடங்களில் முகக்கவசம் அணிய கட்டாயப்படுத்தியுள்ளது. கேரளா கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்கவும், கண்காணிப்பை வலுப்படுத்தவும்,
தமிழ்நாடு, வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.