அதிர்ச்சி தகவல்: சீனாவில் அதிவேகமாக பரவும் பி.எப்.7 கொடூர கொரோனா வைரஸ் - இந்தியாவில் 3 பேருக்கு கண்டுபிடிப்பு...!
சீனாவில் வேகமாக பரவி வரும் பி.எப்.7 கொரோனா வைரஸ் இந்தியாவில் 3 பேருக்கு தொற்று கண்டுடறியப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவில் பரவும் பிஎப் 7 கொரோனா வைரஸ்
சீனாவில் பிஎப் 7 எனப்படும் கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலையடுத்து பல கட்டுப்பாடுகளை அரசு விதித்தது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தியதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
இதனால், சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வண்ணம் உள்ளது. சீனாவில் தற்போது பரவி வரும் இந்த உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நோய் முந்தைய அலைகளை விட அதிவேகம் கொண்டுள்ளது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டிற்குள் இந்த வைரஸ் பரவல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீனாவின் தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் 200 உடல்கள் மேல் நிரம்பி வழிகின்றன.
இந்தியாவில் 3 பேருக்கு BF.7 கொரோனா தொற்று
இந்நிலையில், சீனாவில் அதிவேகமாக பரவி வரும் BF.7 வகை கொரோனா வைரஸ் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ளது. குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.