இந்த வகுப்பிற்கு பொதுத்தேர்வு ரத்து - மு.க.ஸ்டாலின் கைக்கு வந்த ரிப்போர்ட்!!மாணவர்களுக்கு சாதகமாகுமா?
மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழக அரசு பாடத்திட்டத்தின் கீழ் கல்விக்கொள்கையை அமைக்க மாநில அரசு குழு ஒன்றை அமைத்திருந்தது.
தமிழக அரசு குழு
அக்குழுவின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி முருகேசன் இருந்தார். அவர் தற்போதைய தமிழக அரசிடம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை இல்லாமல், தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் கல்விக்கொள்கையை அமைக்க இக்குழு சில பரிந்துரைகளை வழங்கியுள்ளது.
2020'இல் தேசிய கல்விக்கொள்கையை கொண்டு வந்தது மத்திய அரசு. பரிந்துரைகள் 2022 ஜூன் 1ஆம் தேதி அமைக்கப்பட்ட முருகேசன் தலைமையிலான குழு அளித்துள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ள சில குறிப்புகளை தற்போது காணலாம்.
கல்லூரிகளில் சேர 12ஆம் வகுப்பு மதிப்பெண் மட்டும் போதாது என குறிப்பிட்டு, +1 பொதுத்தேர்வும் தொடர வேண்டும் என்று குறிப்பிட்டு பிளஸ்-1 மதிப்பெண்களையும் கணக்கில் சேர்க்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பரிந்துரைகள்
1-ஆம் வகுப்பில் சேர 5 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. காரணம், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் முதல் வகுப்பில் சேர 6 வயது பூர்த்தியானவர்களே அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால், 5 வயது என்பது ஏற்கனவே தமிழக பாடத்திட்டத்தில் இருக்கும் நடைமுறையே.
அதே நேரத்தில் 3, 5 ,8 -ஆம் வகுப்புகளுக்கு பொது தேர்வு நடத்தக்கூடாது என்று இந்த அறிக்கையில் அழுத்தமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பாடத்திட்டத்தின் இருமொழி கொள்கையான தமிழ், ஆங்கிலம் போன்றவற்றையே கடைபிடிக்க வேண்டும் இதில் மிகவும் முக்கியமானதாக நீட் தேர்வை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல நீட் உட்பட தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் - தனியார் கல்வி நிலையங்களின் விளம்பரங்களையும் தடை செய்திடனும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஸ்போக்கன் இங்கிலீஷ்" இருப்பதை போல மாணவர்களுக்கு "ஸ்போக்கன் தமிழ்" மீது தனி கவனம் அளித்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.