மாநில கல்விக் கொள்கை - முதல்வர் இன்று ஆலோசனை!
மாநிலக் கல்விக் கொள்கை உருவாக்க அமைக்கப்பட்ட குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
மாநில கல்விக்கொள்கை
மாநில கல்விக்கொள்கையை வடிவமைக்க ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் 13 பேர் கொண்ட குழுவை தமிழக அரசு அறிவித்தது. குழுவில் பேராசிரியர்கள் ஜவஹர்நேசன், இராமானுஜம், சுல்தான் இஸ்மாயில், இராம சீனுவாசன், முனைவர் அருணா ரத்னம், எழுத்தாளர் இராமகிருஷ்ணன், செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த்,

இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாசன், கல்வியியல் எழுத்தாளர் முனைவர் ச.மாடசாமி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாலு, அகரம் அறக்கட்டளை தலைவர் ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
13 பேர் குழு
குழுவின் உறுப்பினர் செயலராக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் செயல்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து கல்விக்கொள்கையை வடிவமைக்கவும், சமத்துவமான கல்வி, வேலைவாய்ப்புக்கேற்ற பாடத்திட்டம் ,

அனைவரும் உயர்கல்வியை தொடரும் வகையில் கல்விக்கொள்கை உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு இக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் மாநில கல்வி கொள்கையை வடிவமைக்க அமைக்கப்பட்ட 13 பேர் குழுவினருடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையிலான குழுவில் இடம்பெற்றுள்ள 13 பேருடன் காலை 10:30 மணிக்கு முதல்வர் ஆலோசனை நடத்துகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் குழு தலைவர் நீதிபதி முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பாட்டி வயசுல இது தேவையா..நயன் திருமணம் குறித்த மருத்துவர் பதிவு-வலுக்கும் கண்டனங்கள்!