ஊழியர் மீது சிந்திய டீ; 433.49 கோடி இழப்பீடு - ஸ்டார்பக்ஸ்-க்கு நீதிமன்றம் உத்தரவு!
ஊழியர் மீது தேநீர் சிந்தியதால் ரூ. 433.49 கோடி இழப்பீடு வழங்க ஸ்டார்பக்ஸ்-க்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்டார்பக்ஸ்
லாஸ் ஏஞ்சல்ஸ்-இல் உள்ள ஸ்டார்பக்ஸ் விற்பனையகத்தில் மைக்கேல் கார்சியா என்றவர் பணியில் இருந்தார். அங்கு தேநீர் விநியோகம் செய்யும் வேலையை செய்து வந்தார்.
இந்நிலையில், மைக்கேல் விநியோகம் செய்ய எடுத்துச் சென்ற தேநீர் பார்சல் சரியாக மூடப்படாமல் இருந்துள்ளது. தொடர்ந்து அதனை வாடிக்கையாளருக்கு விநியோகம் செய்ய வாகனத்தில் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது தேநீர் அவர் மீது சிந்தி இடுப்பின் கீழ் பகுதி தொடையின் உள்பகுதி மற்றும் அந்தரங்க பகுதி உள்ளிட்டவற்றில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளது.
ஊழியருக்கு இழப்பீடு
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பலமுறை தோல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதாகவும், தீக்காயங்களால் ஏற்பட்ட சிதைவு, வலி, செயலிழப்பு மற்றும் உளவியல் ரீதியான பாதிப்புகளுடன் மைக்கேல் ஐந்து ஆண்டுகள் வாழ்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதனை விசாரித்த நீதிபதி ஸ்டார்பக்ஸ் தேநீர் சிந்தியதால் டெலிவரி ஊழியருக்கு 50 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 433.49 கோடி) வழங்க உத்தரவிட்டுள்ளார்.
தற்போது இதுகுறித்து பேசியுள்ள ஸ்டார்பக்ஸ் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர் ஜேசி ஆண்டர்சன், நீதிபதி அறிவித்துள்ள இழப்பீடு தொகை அதிகமாக இருந்தது. அதைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.