அலுவலகத்திற்கு 1,600 கி.மீ பயணம் - நிறுவனம் வழங்கிய அதிரடி சலுகை
ஸ்டார்பக்ஸ் நிறுவன சிஇஓ 1600 கி.மீ பயணம் செய்து அலுவலகம் செல்ல உள்ளார்.
ஸ்டார்பக்ஸ்
உலகளவில் பிரபல காபி நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் செயல்பட்டு வருகிறது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஆக இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஸ்மன் நரசிம்மன் பணியாற்றி வந்தார்.
சில நாட்களுக்கு முன் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதையடுத்து, புதிய சிஇஓ ஆக பிரையன் நிக்கோல்(brian niccol)நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அடுத்த மாதத்தில் புதிய சிஇஓ ஆக பதவியேற்க உள்ளார்.
1600 கி.மீ பயணம்
பிரையன் நிக்கோலின் அடிப்படை சம்பளம் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்( இந்திய ருபாய் மதிப்பில் 13.42 கோடி) ஆகும். அவரது செயல்பாட்டை பொறுத்து 3.6 மில்லியன்(ரூ. 30.21 கோடி) முதல் 7.2 மில்லியன்(ரூ. 60.43 கோடி) வரை போனஸ் பெற முடியும். 23 மில்லியன் அமெரிக்க டாலர்(ரூ. 193 கோடி) அளவிற்கு வருடாந்திர பங்கு பெறக்கூடிய தகுதியை பெறுவார்.
இந்நிலையில், ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் சியாட்டில் உள்ளது. நிக்கோல் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார். இவரின் வீட்டிலிருந்து அலுவலகம் 1600 கி.மீ தொலைவில் உள்ளது. ஆனால் இவர் ரயிலிலோ விமானத்திலோ பயணம் செய்ய தேவை இல்லை. ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இவர் அலுவலகம் வந்து செல்வதற்காக கார்ப்பரேட் ஜெட் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.