4 மாதத்திற்கு 828 கோடி சம்பளம்;அலுவலகம் செல்ல தனி விமானம் - யார் இந்த CEO?
ஸ்டார்பக்ஸ் நிறுவன CEO 4 மாதத்திற்கு ரூ.828 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.
ஸ்டார்பக்ஸ்
அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்ட ஸ்டார்பக்ஸ்(starbucks), உலகளவில் பிரபல காபி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் விற்பனை சரிந்ததையடுத்து, CEO ஆக பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த லக்ஸ்மன் நரசிம்மன் கடந்த ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டார்.
பிரையன் நிக்கோல்
இதனையடுத்து, பிரையன் நிக்கோல்(brian niccol) ஸ்டார்பக்ஸ் CEO ஆக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பதவியேற்றார். இவர் கடந்த ஆண்டு பணியாற்றிய 4 மாதங்களுக்கு மட்டும் சம்பளமாக 96 மில்லியன் அமெரிக்கா டாலர்(இந்திய மதிப்பில் ரூ.828 கோடி) ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.
சம்பளத்தில் 94 சதவீதம் பங்குகளில் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவர் பணியில் சேர்ந்த ஒரு மாதத்தில் கையொப்பமிட்ட போனஸாக 5 மில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ. 43.13கோடி) வழங்கப்பட்டது.
கலிபோர்னியாவில் உள்ள அவரது வீட்டில் இருந்து சியாட்டில் உள்ள ஸ்டார்பக்ஸின் தலைமை அலுவலகத்திற்கு வந்து செல்வதற்கு தனி விமானம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அமெரிக்காவின் அதிக சம்பள பெறும் 20 CEO களில் ஒருவர் ஆவார். கூகிள் நிறுவன CEO சுந்தர் பிச்சை, ஆப்பிள் நிறுவன CEO டிம் குக் ஆகியோர் 2024 ஆம் ஆண்டு சமதளமாக 75 மில்லியன் டாலர் பெற்றுள்ளனர்.