சென்னையில் நம்ம எப்போது சைக்கிள் ஓட்டலாம்? ராகுலின் கேள்விக்கு ஸ்டாலின் சுவாரஸ்ய பதில்

M K Stalin Rahul Gandhi Cycling Chennai
By Karthikraja Sep 04, 2024 02:12 PM GMT
Report

சென்னையில் சைக்கிள் ஓட்டலாமா என்ற ராகுல் காந்தியின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க 17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிறுவங்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளார். 

stalin cyclying in us

ஓய்வு நேரத்தில் அமெரிக்க சாலையில் முதல்வர் ஸ்டாலின் சைக்கிள் ஓட்டும் வீடியோ அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியாகி வைரலானது. 

ஸ்வீட் பாக்ஸ் எங்கே - முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு ராகுல் காந்தி பதில்

ஸ்வீட் பாக்ஸ் எங்கே - முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு ராகுல் காந்தி பதில்

ராகுல் காந்தி

இந்த வீடியோவை பகிர்ந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "சகோதரரே.! சென்னையில் எப்போது நாம் இருவரும் சைக்கிள் ஓட்டலாம்" என பதிவிட்டிருக்கிறார்.

தற்போது அதற்கு பதிலளித்துள்ள முதல்வர் ஸ்டாலின், "உங்களுக்கு எப்பொழுது நேரம் கிடைக்கிறதோ சென்னை வாருங்கள். சென்னையை சைக்கிளில் சுற்றி அந்த தருணத்தை அனுபவிக்கலாம். 

ஏற்கனவே நான் ஸ்வீட் பாக்ஸ் தர வேண்டியது பாக்கி உள்ளது. சைக்கிள் உலா முடிந்ததும் என் வீட்டில் மதிய உணவிற்கு ஸ்வீட் உடன் தென்னிந்திய உணவை ருசிக்கலாம்" என கூறியுள்ளார்.