ஸ்வீட் பாக்ஸ் எங்கே - முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்துக்கு ராகுல் காந்தி பதில்
தனக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
நேற்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடிய ராகுல்காந்திக்கு நாடு முழுவதும் உள்ள முக்கிய அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து இருந்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பான சகோதர் ராகுல் காந்தி! நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்." என தெரிவித்து இருந்தார்.
ஸ்வீட் பாக்ஸ்
இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் வாழ்த்து செய்திக்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதிலளித்துள்ள ராகுல் காந்தி "பிறந்த நாள் வாழ்த்து கூறியதற்கு எனது அருமை சகோதரர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. இன்று ஸ்வீட் பாக்ஸ்கிற்காக காத்திருக்கிறேன்" என்று ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார்.
Thank you for your wishes, my dear brother Thiru @mkstalin.
— Rahul Gandhi (@RahulGandhi) June 19, 2024
I’m waiting for my box of sweets today ? https://t.co/7T3TVfbDU2
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் பொது தேர்தல் பிரச்சாரத்துக்காக தமிழ்நாடு வந்த ராகுல் காந்தி ரோடு கிராஸ் செய்து கடைக்கு சென்று ஸ்வீட் வாங்கிய வீடியோ இணையதளத்தில் வைரலானது. அந்த வீடியோவை பகிர்ந்து தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார்.