அன்பு சகோதரர் ராகுல் காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து - முதல்வர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Rahul Gandhi
By Karthikraja Jun 19, 2024 04:40 AM GMT
Report

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி

ஜவாஹர்லால் நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி என இந்தியாவின் 3 பிரதமர்களை கொண்ட பாரம்பரிய அரசியல் குடும்பத்தில், கடந்த 1970 ம் ஆண்டு ஜூன் 19 ம் தேதி பிறந்தார் ராகுல் காந்தி.  

rahul gandhi birthday

2004 ல் தனது அரசியல் வருகையை அறிவித்த ராகுல் காந்தி, 2004, 2009, 2014 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2019 நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வயநாடு தொகுதியில் வெற்றி பெற்றார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வயநாடு மற்றும் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

2017 காங்கிரஸின் அகில இந்திய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராகுல் காந்தி, 2019 நாடாளுமன்ற தோல்விக்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து விலகினார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணியின் முகமாக அறியப்பட்டார் ராகுல் காந்தி. 

எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி இல்லையா? - காங்கிரஸ் நிர்வாகி வெளியிட்ட பரபரப்பு தகவல்

எதிர் கட்சி தலைவர் ராகுல் காந்தி இல்லையா? - காங்கிரஸ் நிர்வாகி வெளியிட்ட பரபரப்பு தகவல்

பிறந்தநாள் வாழ்த்து

இன்று தனது 54 வது பிறந்தநாளை கொண்டாடும் ராகுல்காந்திக்கு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்பான சகோதர் ராகுல் காந்தி! நம் நாட்டு மக்களுக்கான உங்களின் அர்ப்பணிப்பு உங்களை உயரத்திற்கு அழைத்துச் செல்லும். நீங்கள் தொடர்ந்து முன்னேறவும் வெற்றியடையவும் வாழ்த்துக்கள்." என தெரிவித்துள்ளார்.