கேண்டிடேட்ஸ் செஸ் தொடர்; தமிழகத்தை சேர்ந்த குகேஷ் அபார வெற்றி - முதல்வர் வாழ்த்து!
கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்ட்ரான தமிழகத்தைச் சேர்ந்த குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
கேண்டிடேட்ஸ் செஸ்
கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் பங்கேற்றார்.14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் அமெரிக்காவின் ஹிகாரு நகாமுரா மற்றும் குகேஷ் ஆகியோர் மோதினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற 14வது சுற்றில் போட்டியின் இறுதியில் டிரா செய்ததன் மூலம் 9 புள்ளிகளை பெற்றார்.அதுமட்டுமின்றி 17 வயதான குகேஷ், கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
முதல்வர் வாழ்த்து
அவருக்கு இந்தியாவின் முன்னணி கிராண்ட் மாஸ்டரான விஸ்வநாதன் ஆனந்த் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் குகேஷுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாற்று படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் வெல்ல வாழ்த்துகள்" என்று குறிப்பிட்டுள்ளார்.