கார்ல்செனை பதற்றமடைய வைத்த பிரக்ஞானந்தா - வென்றால் பரிசு எவ்வளவு தெரியுமா?
உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இன்று நடைபெறவுள்ளது.
செஸ் சாம்பியன்ஷிப்
உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.
இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார்.
பரிசுத்தொகை
தொடர்ந்து, பிரக்ஞானந்தா அடுத்து இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) மோதினார். அதில் 2 போட்டிகளும் டிராவில் முடிந்தது. ப்ரக்ஞானந்தாவின் காய் நகர்த்தலுக்கு கார்ல்சன் மிகவும் யோசித்தே காய் நகர்த்தினார்.
தன்னுடைய 13வது காய் நகர்த்தலுக்கு மட்டும் கார்ல்சென் 27 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இந்நிலையில், இன்று இருவரும் டிரை பிரேக்கர் போட்டியில் விளையாடவுள்ளனர்.
இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் நபருக்கு இந்திய மதிப்பில் 91 லட்சம் ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் நபருக்கு 66 லட்சம் ரூபாயும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.