இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா; ராணியாக வலம் வரும் தாய் - வியந்த உலக நாடுகள்!

Chess
By Sumathi Aug 22, 2023 09:26 AM GMT
Report

பிரக்ஞானந்தா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், அவரது தாய் கவனம் பெற்றுள்ளார்.

பிரக்ஞானந்தா 

உலகக் கோப்பை செஸ் தொடர் அஜர்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதன் அரை இறுதி ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஃபேபியானோ கருனாவுடன் மோதினார்.

இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா; ராணியாக வலம் வரும் தாய் - வியந்த உலக நாடுகள்! | Pragnananda With Carlsen In The World Cup Chess

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மற்றும் நேற்று விளையாடிய இரண்டு ஆட்டமும் டிராவில் முடிந்தது. அதனால் டை பிரேக்கர் மூலம் வெற்றியாளரை உறுதி செய்யும் ஆட்டம் இன்று நடைபெற்றது.

கவனம் ஈர்த்த தாய்

பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் பிரக்ஞானந்தா வெற்றி பெற்றார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இறுதி போட்டியில் பிரக்ஞானந்தா; ராணியாக வலம் வரும் தாய் - வியந்த உலக நாடுகள்! | Pragnananda With Carlsen In The World Cup Chess

தொடர்ந்து, பிரக்ஞானந்தா அடுத்து இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரும், 5 முறை உலக சாம்பியனுமான மாக்னஸ் கார்ல்செனுடன் (நார்வே) இன்று மோதுகிறார். அவரின் அம்மா நாகலட்சுமி தற்போது உலக அளவில் கவனிக்கப்பட்டு வருகிறார்.

பிரக்ஞானந்தா ஆடும் போது அவரின் அம்மா அங்கே தனியாக அமர்ந்து இருந்த புகைப்படம் வைரலாகி வருகிறது. இதற்கிடையில், செஸ் ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த், பயிற்சியாளர் ரமேஷ், இந்திய செஸ் சம்மேளன தலைவர் சஞ்சய் கபூர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.