உலக சாம்பியன் கார்ல்சனை தெறிக்கவிட்ட பிரக்ஞானந்தா - 3 முறை சாதனை!
உலக சாம்பியன் கார்ல்சனை, இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா மீண்டும் வீழ்த்தினார்.
பிரக்ஞானந்தா
கிரிப்டோ கோப்பை தொடரின் ஏழாவது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. அதாவது பிரக்ஞானந்தா இந்தப் போட்டியில் 4 ரேபிட் கேம்களில் கார்ல்சனை வீழ்த்தி 3 புள்ளிகள் பெற்றிருந்தால் கார்ல்சனை வீழ்த்தி சாம்பியன் ஆகியிருப்பார்.
ஆனால் ஆட்டம் டை பிரேக்கிற்குச் சென்றதால் கார்ல்சன் சாம்பியன் ஆனார். டைப்பிரேக்கரில் பிரக்ஞானந்தா வென்று 2ம் இடம் பிடித்தார். கார்ல்சன் 16 புள்ளிகளுடன் முதலிடம் பிடிக்க, பிரக்ஞானந்தா 15 புள்ளிகளுடன் 2ம் இடம் பிடித்தார்,
மூன்றாவது முறை...
ஒரு புள்ளியில் துரதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை தவற விட்டார். பிரதான போட்டி 2-2 என டிரா ஆனநிலையில் டை பிரேக்கரில் கார்ல்சனை வீழ்த்தி சாதனை நிகழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.
மியாமி நகரில் நடைபெற்ற இந்த தொடரில் ஏழு சுற்றுகளின் முடிவில் பிரக்ஞானந்தா இரண்டாமிடம். நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கார்ல்சனை வீழ்த்தியுள்ளார் பிரக்ஞானந்தா.