நடிகர் ரஜினியை சந்தித்து ஆசிப்பெற்றார் பிரக்ஞானந்தா - சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்து அசத்திய ரஜினி

Rajinikanth Rameshbabu Praggnanandhaa
By Nandhini Jul 23, 2022 07:19 AM GMT
Report

அசத்தும் பிரக்ஞானந்தா

சமீபத்தில் நார்வே செஸ் ஓபன் போட்டியுடன் இணைந்து குரூப் ஏ பிரிவுக்கான போட்டியும் நடந்தது. அப்போட்டியில் வெற்றி பெற்று கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

தமிழகத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 3ம் இடம் பிடித்தார். குரூப் ஏ பிரிவுக்கு நடைபெற்ற போட்டியில் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்ற பிரக்ஞானந்தா, இந்திய வீரர் பிரனீத்தை தோற்கடித்து 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டம் பெற்றார்.

இதனையடுத்து, பிரக்ஞானந்தாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

நடிகர் ரஜினி நேரில் சந்திப்பு 

இந்நிலையில், உலகப்புகழ் பெற்ற செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தா இன்று தனது குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து ஆசிப் பெற்றுள்ளார்.

Praggnanandhaa - Rajinikanth

செஸ் தொடர்களில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வரும் பிரக்ஞானந்தாவை நடிகர் ரஜினிகாந்த் வியந்து பாராட்டியுள்ளார்.

அடுத்ததாக நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என பிரக்ஞானந்தாவிடம் கூறி வாழ்த்தியுள்ளார்.

பிரக்ஞானந்தாவிற்கு சர்ப்ரைஸ் கிப்ட்டாக செஸ் போர்ட் ஒன்றையும், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றைவும் நடிகர் ரஜினிகாந்த் பரிசாக வழங்கியுள்ளார்.  தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பிரக்ஞானந்தா டுவிட்

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பிரக்ஞானந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “மறக்க முடியாத நாள், இன்று ரஜினி அங்கிளை எனது குடும்பத்தினருடன் சென்று சந்தித்தேன்.

இவ்வளவு உயரங்கள் சென்றும் அவர் மிகவும் எளிமையாக இருப்பது என்னை ஈர்த்தது. மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.