ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் - கண்ணீர் விட்ட ஆம்ஸ்ட்ராங் மனைவி
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்றுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங்
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு சென்னை பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் வெளியே பேசிக்கொண்டிருந்த போது 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக தற்போது வரை 11 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
மு.க.ஸ்டாலின்
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்வரும், பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவருமான மாயாவதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். இதன் பின் ஆம்ஸ்ட்ராங் உடல் திருவள்ளூர் மாவட்டம் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது.
தற்போது பெரம்பூர், அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அங்கு வைக்கப்பட்டிருந்த ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு ஆறுதல் கூறினார்.