சாதிவாரி கணக்கெடுப்பே முதல் பணி - மத்திய அரசை வலியுறுத்தும் முதல்வர் ஸ்டாலின்

M K Stalin Tamil nadu DMK
By Karthikraja Jul 29, 2024 02:40 PM GMT
Report

 சாதிசாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய மத்தியரசுக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின்

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

mkstalin

அந்த வீடியோவில், தி.மு.க.,வின் சட்டப் போராட்டங்களால் 3 ஆண்டுகளில் 15,066 ஓ.பி.சி., மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது பெருமை அளிக்கிறது. இந்தச் சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூக நீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது. 

அரசியல் கட்சி தொடங்கும் கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர் - பீகாரில் ஆட்சியை பிடிப்பாரா?

அரசியல் கட்சி தொடங்கும் கிங் மேக்கர் பிரசாந்த் கிஷோர் - பீகாரில் ஆட்சியை பிடிப்பாரா?

சாதிவாரி கணக்கெடுப்பு

நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதுதான். 

இந்தியாவில் பின் தங்கிய சமூகத்தினரின் விகிதாசாரத்தை தெரிந்து கொள்ளவும், நாட்டின் சமூக நீதியை நிலைநாட்டிட, நமது உரிமைகளை பெறவும் சாதி வாரி கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே நடத்த வேண்டும். சாதி வாரி கணக்கெடுப்பை வலியுறுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என கூறியுள்ளார்.