"மு.க.ஸ்டாலின் ஒரு கொரோனா, உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா" - வைகைச்செல்வன் பரபரப்பு பேச்சு

corona admk dmk
By Jon Jan 22, 2021 01:21 PM GMT
Report

சட்டமன்ற தேர்தல் நெருங்க அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, "இன்றைக்கு பல பேர் கட்சியை தொடங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து வருகின்றனர். பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கூட தரமுடியாத ஒருத்தர் இன்றைக்கு கட்சியே வேண்டாம் என்று சொல்லிவிட்டார். வாக்காளரிடம் கடன் சொல்லிய ஒருவர் இருக்கிறார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்களர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று கடன் சொல்லியவர்தான் டி.டி.வி.தினகரன். கமல்ஹாசனை மக்கள் நடிகராக மட்டும்தான் பார்ப்பார்கள். எல்லோரும் ஓட்டு போடுவதற்கு கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தலை பிக்பாஸ் என்று நினைக்கிறார்.

ஷிவானி, ரம்யாபாண்டியனுக்கு விழுந்த ஓட்டு கூட கமல்ஹாசனுக்கு பொதுத் தேர்தலில் விழாது. மு.க.ஸ்டாலின் ஒரு கொரோனா, உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா, பெண்களை பற்றி உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருகிறார். இதனை கேட்டுக்கொண்டு மு.க.ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறார்" என்று பேசினார்.