அமைச்சர் ரோஜாவிடம் தொலைபேசியில் பேசிய ஸ்டாலின் - பதில் ட்வீட் போட்ட நடிகை!

Roja M K Stalin
By Vinothini Jun 18, 2023 12:03 AM GMT
Report

முதல்வர் ஸ்டாலின் அமைச்சர் ரோஜாவிடம் தொலைபேசியில் பேசியது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அமைச்சர் ரோஜா

ஆந்திர மாநிலத்தில் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் நடிகை ரோஜா. சில தினங்களுக்கு முன்பு இவர் சென்னையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்தபோது திடீரென காலில் வலி மற்றும் வீக்கம் ஏற்பட்டது.

stalin-spoke-to-roja-she-shared-this-on-twitter

இதையடுத்து, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அப்போது ரோஜாவிடம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்துள்ளார்.

ட்வீட்

இந்நிலையில், முதல்வர் பேசியது குறித்து நடிகை ரோஜா தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனிதாபிமான செயலால் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

என்னை தொலைபேசியில் அழைத்த அவர், என்னுடைய உடல்நிலை குறித்து விசாரித்து, உடல்நலனை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். முன்னர் தனக்கு ஏற்பட்ட இதே உடல்நலப் பிரச்சினையை தான் கடந்த வந்தது குறித்தும் என்னிடம் கூறினார்.

என்னுடைய உடல்நலன் குறித்த அறிவுரையின் மூலம் பிறர் மீது அவர் வைத்திருக்கும் அன்பைக் கண்டு நெகிழ்ந்து போனேன். அவர் மிகச்சிறந்த ஆட்சியாளர் மட்டுமல்ல. அக்கறையான மனிதரும் கூட என்பதை அவர் நிரூபித்துள்ளார். மிக்க நன்றி சார்" என்று கூறியுள்ளார்.