இதுதான் மத்திய பாஜக அரசு கல்வியை மேம்படுத்தும் முறையா? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

Ministry of Education M K Stalin BJP
By Karthikraja Sep 09, 2024 05:37 AM GMT
Report

கல்வியில் சிறப்பாக செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பாத என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்வி நிதி

ஆண்டு தோறும் மாநிலங்களுக்கு சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின்கீழ் குறிப்பிட்ட அளவிலான நிதியை மத்தியக் கல்வி அமைச்சகம் வழங்கி வருகிறது.

tamilnadu schools

இந்த திட்டத்தின் கீழ் 2024-25 கல்வியாண்டில் தமிழ்நாட்டிற்கு 3,586 கோடியை தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டும்.  இதன்படி முதல் தவணையாக ரூ.573 கோடியை ஜூன் மாதமே மத்திய அரசு வழங்கியிருக்க வேண்டும். 

தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு - ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்திய மத்திய அரசு - ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் சிக்கல்

ஸ்டாலின் கேள்வி

ஆனால் பல முறை மாநில அரசு சார்பில் கடிதம் எழுதியும் இந்த நிதி தற்போது வரை வழங்கப்படவில்லை. பி.எம். ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் நிதி வழங்கப்படும் என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் பி.எம். ஸ்ரீ பள்ளிகளில் தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதல்களை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்ற விதியை தவிர்த்து, ஒப்புதல் பெறுவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்திற்கு தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அனுப்பியது. ஆனால் இதை மத்திய அரசு ஏற்க மறுத்துள்ளது. இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இது தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளார்.  

இது தொடர்பாக நாளிதழ் செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதல்வர் ஸ்டாலின், “தேசியக் கல்விக் கொள்கைக்கு அடிபணிய மறுத்ததற்காக கல்வியில் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கு நிதி மறுப்பதும், இலக்குகளை நிறைவேற்றாத மாநிலங்களுக்கு தாராளமாக நிதி வழங்குவதும் தான் மத்திய பாஜக அரசின் தரமான கல்வி மற்றும் சமத்துவத்தை மேம்படுத்தும் திட்டமா?” என கூறியுள்ளார்.