சமூகவலைதள வதந்திகள் பெரும் பிரச்னையாக உள்ளது - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

M K Stalin Tamil nadu Social Media
By Karthikraja Oct 19, 2024 06:32 AM GMT
Report

போதைப்பொருள் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுப்பதில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது என ஸ்டாலின் பேசியுள்ளார்.

காவல்துறை மாநாடு

சென்னை, கிண்டியில் நடைபெறும் தென் மாநில காவல்துறை இயக்குநர்கள் மற்றும் படைத்தலைவர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். 

stalin

அந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையில், "சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விசயங்களில், தென் மாநிலங்களைச் சேர்ந்த நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். 

ஆளுநரா? ஆரியநரா? தேசிய கீதத்தில் திராவிடத்தை விடுவாரா? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

ஆளுநரா? ஆரியநரா? தேசிய கீதத்தில் திராவிடத்தை விடுவாரா? கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

போதைப் பொருள் ஒழிப்பு

மிக முக்கிய பிரச்னைகளான போதைப் பொருட்கள், மாநிலங்களுக்கு இடையிலான குற்றச்செயல்கள் போன்ற குற்றச்சம்பவங்களில் இருந்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நாம் கூடியிருக்கிறோம். போதைப் பொருள் ஒழிப்பில் தீவிர கவனம் செலுத்தி வருகிறோம். 

stalin

போதைப் பொருள் விநியோகம், விற்பனை ஆகியவற்றை தடுப்பதற்கு தமிழ்நாடு அரசும், தமிழக காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் தொடர் முயற்சிகள் காரணமாக, மாநிலத்தில் கஞ்சா பயிரிடப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளை விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீதான பொருளாதார நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.

இணையவழி குற்றம்

போதைப் பொருட்களின் தீமைகளை மாணவர்கள் மத்தியில் பிரசாரம் செய்வது, கல்வி நிலையங்கள் அருகில் போதைப் பொருள் விற்பனையை தடுப்பது உள்ளிட்டவை நல்ல பலன்களை கொடுத்துள்ளது. தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் தமிழ்நாட்டிற்குள் வருவதைத் தடுக்க, தமிழ்நாடு காவல்துறையும், அண்டை மாநில காவல்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

இணையவழி குற்றம் என்பது எவ்வித எல்லைகளும் இல்லாமல், சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி, பெருகி வரும் மிகச் சிக்கலான பிரச்னை. இணையவழி குற்றவாளிகளைப் பிடிக்க, பிற மாநிலங்களுக்கு செல்ல மாநில காவல்துறை பல தடைகளை சந்திக்க வேண்டியிருக்கு. இந்த குற்றங்களை தடுக்கவும் நாம் இணைந்து செயல்பட வேண்டிய சூழலில் உள்ளோம்.

1390 குற்றவாளிகள் வெளிமாநிலங்களில் பிடிக்கப்பட்டுள்ளனர். கேரள போலீஸ் ஒத்துழைப்போடு அண்மையில் நாமக்கல் அருகே ஏ.டி.எம்., கொள்ளையர்கள் பிடிபட்டனர். இந்த சம்பவத்தில் பணியாற்றிய போலீசாருக்கு பாராட்டுகள்.

சமூக வலைதள வதந்தி

வெளிநாட்டில் வேலை தேடும், இளைஞர்களை குறிவைத்து, அவர்களை அடிமைகளாக கணினி சார் குற்றங்களில் ஈடுபடுத்தும் ‘Cyber Slavery’ பிரச்னை தற்போது பெரிய அளவில் உருவெடுத்துள்ளது. இதனால் நம்ம இளைஞர்கள் பலர் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

சட்டம்  ஒழுங்கை நிலைநாட்ட சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்திகள் பெரும் பிரச்னையாக இருக்கிறது. அவற்றைப் பயன்படுத்தி பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்க நினைக்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் வரக்கூடிய வதந்திகளைப் பற்றியும் நாம் மிகுந்த கண்காணிப்புடன் இருந்து, ஒருங்கிணைந்து மக்களின் பாதுப்பை உறுதி செய்ய வேண்டும்" என பேசினார்.