ரஜினிகாந்தும் கலைஞரின் உடன்பிறப்புதான் - மு.க.ஸ்டாலின்

M K Stalin M Karunanidhi E. V. Velu
By Karthikraja Aug 24, 2024 08:30 PM GMT
Report

முதலமைச்சர் கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்ல தாயும்தான் என தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

கலைஞர் எனும் தாய்

மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்னும் நூலை எழுதியுள்ளார். 

கலைஞர் எனும் தாய்

இந்த நூல் வெளியீடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். மேலும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் விழா மேடையில் பேசினார். 

சிவாஜி படத்தை பார்த்து விட்டு ஒழிக்கணும் என கலைஞர் சொன்னார் - ரஜினிகாந்த் பேச்சு

சிவாஜி படத்தை பார்த்து விட்டு ஒழிக்கணும் என கலைஞர் சொன்னார் - ரஜினிகாந்த் பேச்சு

மு.க.ஸ்டாலின்

இந்த விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தாய் காவியத்தை கவிதை நிலையில் உருவாக்கிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு தமிழ் ஓவியம் தீட்டியிருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு. ‘கலைஞர் எனும் தாய்’ இந்த தலைப்பிலேயே மொத்தமும் அடங்கிய இருக்கிறது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தாய் ஆகவும் வாழ்ந்தார். எனக்கு தந்தை மட்டுமல்ல தாயும் அவர் தான். எனக்கு மட்டுமல்ல லட்சக்கணக்கான திமுக தொண்டர்களுக்கு தந்தையாகவும், தாயாகவும், தலைவராகவும் இருந்தவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. 

mk stalin

நடிகர் ரஜினிகாந்த், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் ஆகியோரும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உடன்பிறப்புகள் தான். எனது பாட்டி அஞ்சுகம் அம்மையார் பற்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மிக உருக்கமாக எழுதுவார். அஞ்சுகம் அம்மையார் எப்படி எல்லாம் உணவு ஊட்டி, அன்பு காட்டினார் என்பது பற்றி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரும், நடிகர் சிவாஜி கணேசனும் தெரிவித்துள்ளனர்.

சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரை கீழக்கரை ஜல்லிக்கட்டு அரங்கம், திருவாரூர் கலைஞர் கோட்டம் உள்ளிட்டவைகள் அமைச்சர் எ.வ.வேலுவின் திறமைக்கு சாட்சியாக அமைந்துள்ளது.அதுமட்டுமல்ல அமைச்சர் எ.வ.வேலு திரைப்படம் தயாரித்துள்ளார், நடித்துள்ளார், கூத்துக் கட்டியுள்ளார, சினிமா, நாடகத்திலும் நடித்துள்ளார். எதிலும் வல்லவரான அமைச்சர் எ.வ.வேலு ‘கலைஞர் எனும் தாய்’ நூல் மூலம் எழுத்திலும் வல்லவர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் என பேசியுள்ளார்.