சிவாஜி படத்தை பார்த்து விட்டு ஒழிக்கணும் என கலைஞர் சொன்னார் - ரஜினிகாந்த் பேச்சு
அரசியல் பேசினால் ஜாக்கிரதையாக பேச வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
கலைஞர் எனும் தாய்
மறைந்த முன்னாள் முதலமைச்சரும் திமுகவின் முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’ என்னும் நூலை எழுதியுள்ளார்.
இந்த நூல் வெளியீடும் நிகழ்வு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நூலை வெளியிட, முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரவேற்புரை ஆற்றினார். மேலும், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்து என்.ராம் அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் விழா மேடையில் பேசினார்.
ரஜினிகாந்த்
இந்த விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக அரசு கொண்டாடிய விதம் இருக்கிறதே, எத்தனை மாவட்டங்களில், எத்தனை எத்தனை விதமான கொண்டாட்டங்கள். உலகத்தில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இந்த மாறி யாரும் நூற்றாண்டு விழா கொண்டாட மாட்டார்கள், கொண்டாட போவதும் இல்லை.
அறிவார்ந்தவர்கள் இருக்கும் சபையில் பேசாமல் இருப்பது தான் அறிவாளித்தனம். நான் என்ன பேசணும் என்பதை விட என்ன பேச கூடாது என லிஸ்ட் எடுத்துள்ளேன். ஏவ வேலு முதலிலே சொன்னார்கள் இது அரசியல் விழா அல்ல என்று. கலைஞரை பற்றி பேச வேண்டுமானால் 3 விஷயங்கள். சினிமா, இலக்கியம், அரசியல்.
கலைஞர் அவரின் அரசியல் பற்றி பேசியுள்ளேன். அவரின் இலக்கியம் பற்றி எனக்கு தெரியாது. அடுத்து அரசியல். அரசியல் பற்றி பேசும் போது ஜாக்கிரதையாக பேச வேண்டும். ஸ்டாலின் சார் சந்தித்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றதற்கு காரணம் அவரின் உழைப்பு, அரசியல் ஞானம். துரை முருகன் கலைஞர் கண்ணில் விரல் விட்டு ஆட்டியவர். கலைஞர் சந்தித்த அளவுக்கு சோதனைகள் விமர்சனங்களை வேறு யாரும் சந்தித்து இருந்தால் காணாமல் போயிருப்பார்கள். விமர்சனங்கள் புயல் மாதிரி இருந்தால் மரமே சாய்ந்து விடும். ஆனால் இது ஆலமரம். வேர் ரொம்ப ஸ்ட்ராங். அவருடைய உடன் பிறப்புகள் ரொம்ப ஸ்ட்ராங். இல்லையெனில் 12 வருஷம் ஆட்சியில் இல்லாமல் இருந்தால் கூட கட்சியை காப்பாற்ற முடியுமா? 5 வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்தாலே திண்டாடுகிறார்கள்.
சிவாஜி படம் அரசியல்வாதிகளை சாடி, ஊழலை பற்றி பேசிய படம். அந்த படத்தின் கதை தெரிந்தும் கலைஞர் அவர்கள் வந்து பார்த்தார்கள். படத்தை பார்த்து விட்டு நமக்கு இதெல்லாம் ஒழிக்கணும் நல்லது செய்யணும்னு ஆசை என கூறி பெருமூச்சு விட்டார். அந்த மூச்சில் பல ஆயிரம் அர்த்தங்கள் இருந்தது" என பேசியுள்ளார்" என பேசியுள்ளார்.