ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
தேநீர் விருந்து
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4:30 மணியளவில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தை புறக்கணிப்பதாக காங்கிரஸ் , கட்சி கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளன.
திமுகவின் கூட்டணி கட்சிகள் அனைத்தும் ஆளுநர் வழங்கும் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ள நிலையில் திமுக தேநீர் விருந்தில் பங்கேற்குமா? என்ற கேள்வி எழுந்தது.
முதலமைச்சர் பங்கேற்பு
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் இன்று ஆளுநர் மாளிகையில் வழங்க உள்ள தேநீர் விருந்து முதலமைச்சரின் மு.க. ஸ்டாலின் பங்கேற்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
முன்னதாக, நிறைவடைந்த குடியரசு தின விழாவில் கை கொடுத்து சிரித்த முகத்துடன் ஆளுநரை, முதலமைச்சர் வழியனுப்பினார்.