குடியரசு தினவிழா : ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அழைப்பிதழில் தமிழ்நாடு
கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள குடியரசு தின வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு என்று அச்சிடப்பட்டுள்ளது.
ஆளுநர் ரவி சர்ச்சை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆளுநர் தமிழ்நாடு குறித்த விவகாரம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழக சட்டசபையில் ஆளுநர் பேசும் போது தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, சமூகநீதி, சுயமரியாதை, பெரியார், அண்ணல்அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் உரைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்தார் .
மீண்டும் தமிழ்நாடு
குறிப்பாக பொங்கல் விழாவின் போது ஆளுநர் வெளியிட்ட அழைப்பு மடலில் தமிழ்நாடு என்று இல்லாமல் தமிழகம் என இருந்ததால் தமிழக அரசியலில் ஆளுநர் குறித்த விமர்சனங்கள் அதிகரித்த நிலையில் வரும் 26-ம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு தமிழ்நாடு கவர்னர் மாளிகையின் வரவேற்பு அழைப்பிதழில் தமிழ்நாடு அரசு முத்திரையுடன் தமிழ்நாடு கவர்னர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது