SPB Road; சென்னையில் சாலைக்கு எஸ்.பி.பி பெயர் - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
சென்னையில் உள்ள சாலைக்கு பாடகர் SPB பெயர் சூட்டி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
எஸ்.பி.பி என அழைக்கப்படும் பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியம் (S. P. Balasubrahmanyam) தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல்வேறு மொழிகளில் 40,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.
இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். கொரோனா தொற்றில் இருந்த மீண்ட இவர் திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு செப்டம்பர் 25 ஆம் தேதி உயிரிழந்தார்.
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை
இந்நிலையில், எஸ்.பி.பி நீண்ட காலம் வசித்த நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பகுதியை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று அவரது மகன் எஸ்.பி.பி.சரண் முதல்வர் அலுவலகத்தில் கோரிக்கை வைத்தார்.
பாடும் நிலா #SPBalasubrahmanyam அவர்களது நினைவு நாளில், அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்.#SPB… pic.twitter.com/UuwwR1m1E0
— M.K.Stalin (@mkstalin) September 25, 2024
இந்நிலையில் "அவரது நினைவு நாளான இன்று அவர் வாழ்ந்த காம்தார் நகர் பிரதான சாலைக்கு “எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சாலை” எனப் பெயரிடப்படும் எனும் அறிவிப்பைச் செய்வதில் பாலு அவர்களின் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக மகிழ்ச்சியும் பெருமிதமும் கொள்கிறேன்" என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.