அவர் வாழ்ந்த இடம்..எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என மாற்றுக - மகன் கோரிக்கை!

S P Balasubrahmanyam M K Stalin Tamil nadu Chennai
By Swetha Sep 23, 2024 12:30 PM GMT
Report

எஸ்.பி.பி வாழ்ந்த நகரினை ‘எஸ்.பி.பாலசுப்ரமணியம் நகர்’ என பெயர் மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எஸ்.பி.பி நகர்  

இந்தியாவின் பல மொழிகளில் பாடல்களை பாடி ஒட்டுமொத்த தேசத்தின் நெஞ்சங்களிலும் எஸ்.பி பாலசுப்பிரமணியம் நீங்கா இடம் பிடித்துள்ளார். பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக கொடி கட்டி பறந்தவர்.

அவர் வாழ்ந்த இடம்..எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என மாற்றுக - மகன் கோரிக்கை! | Sp Saran Req Cm To Name Street After Late Spb Sir

40 ஆயிரம் பாடல்கள், ஆறு தேசிய விருதுகள், ஒரே நாளில் 21 பாடல்கள் என எவரும் செய்திட முடியாத சாதனையை நிகழ்த்திக் காட்டியவர். பத்மஸ்ரீ, பத்மபூஷன் என இந்திய அரசின் மிக உயரிய விருதுகளையும் பெற்ற எஸ்.பி.பி,

கொரோனா தொற்றுக்கு ஆளாகி, கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ம் தேதி மறைந்தார். இந்த நிலையில், எஸ்.பி.பி நீண்ட காலம் வசித்த காம்தார் நகர் பகுதியை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் என பெயர் மாற்ற வேண்டும் என்று,

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.!

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.!

மகன் கோரிக்கை

அவரது மகன் எஸ்.பி.பி.சரண் முதலமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில், நீண்ட நெடும் காலமாக சினிமா துறையில் தனது இசையின் மூலமாக தமிழக மக்கள் மனதில் இடம் பிடித்து மாறா அன்பை பெற்ற மறைந்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவை போற்றும் வகையில்,

அவர் வாழ்ந்த இடம்..எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நகர் என மாற்றுக - மகன் கோரிக்கை! | Sp Saran Req Cm To Name Street After Late Spb Sir

அவர் இறுதி மூச்சு வரையில், நீண்ட காலம் வாழ்ந்த சென்னை 600034, காம்தார் நகரினை அல்லது அவர் வாழ்ந்த வீதியினை "எஸ் பி பாலசுப்ரமணியம்" நகர் அல்லது வீதி என பெயர் மாற்றம் செய்திட உரிய ஆவணம் செய்யுமாறு அவருடைய ரசிகன் என்ற முறையிலும், மகன் என்ற முறையிலும்,

என் சார்பிலும் எனது குடும்பத்தினர் சார்பிலும் மிகவும் பணிவுடன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன். அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் ஆவலும், வேண்டுதலும் இதுவே என்பதையும் உங்கள் கனிவான பார்வைக்கு கொண்டு வர கடமை பட்டிருக்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளார்