எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.!

today spb bdy
By Anupriyamkumaresan Jun 04, 2021 05:35 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கட்டுரை
Report

அரை நூற்றாண்டுகளாக இசையுலகில் கொடிகட்டி பறந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இவ்வுலகில் பிறந்த தினம் இன்று..

70’ஸ் கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரை அனைவரது நெஞ்சிலும் குடியிருக்கும் எஸ்.பி.பி. பல்வேறு மொழிகளில் பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடி நம்மை மகிழ்வித்துள்ளார்.

'அடிமைப் பெண்’ முதல் ’அண்ணாத்த’ படம் வரை பல பாடல்களை பாடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து சென்றுள்ளார்.

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.! | Spb Birthday Today Singer Actor

தலைமுறை இடைவெளி காணாத ஒரேஒரு பாடகராக தமிழ் திரையுலக வரலாற்றில் எஸ்பிபி விளங்கி நிற்கிறார். 1966 ஆம் ஆண்டு தொடங்கி கலைத்துறையில் மூன்று தலைமுறைகளை கண்டவர், 16 மொழிகளுக்கு மேல் பாடியவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளிலும் முன்னிலை பாடகராகத் தொடர்ந்து தன் இருப்பைத் தக்க வைத்த ஒரு ஆளுமை.

ஒவ்வொரு தலைமுறையினருக்கு ஏற்றவாறு பாடி அந்தந்த தலைமுறையினரின் மனதில் இடம்பிடித்து கடைசி மூச்சு வரை அவரது இனிமையான குரலில் பாடல்களை பாடி உயிர் பிரிந்த உத்தமர்.

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.! | Spb Birthday Today Singer Actor

அவர் இவ்வுலகில் இல்லாத முதல் பிறந்த நாள் இது. ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயர் கொண்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.பி. சாம்பமூர்த்தி - சகுந்தலம்மா தம்பதியினருக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொணடம்மாபேட்டை கிராமத்தில் ஜூன் 4ஆம் தேதி 1946 அன்று பிறந்தார்.

தந்தை சாம்பமூர்த்தி ஒரு இசைக் கலைஞர் என்பதால் எஸ்பிபிக்கு இளம் வயதில் இருந்தே இசை ஆர்வம் இருந்தது. தந்தையின் இசையமைப்பை கவனித்து இசைக் கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொண்டார். இசை ஆர்வம் ஒருபுறம் இருக்க, பொறியாளராக வேண்டும் என்பதுதான் எஸ்பிபியின் ஆசையாக இருந்தது.

பியுசி தேர்வு எழுதிவிட்டு நெல்லூரில் நண்பர்களுடன் இணைந்து இசைக்குழு ஒன்றைத் தொடங்கினார் எஸ்பிபி . பின்னர், சென்னையில் ஏஎம்ஐஇ படித்தார்.

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.! | Spb Birthday Today Singer Actor

படித்துக்கொண்டே சினிமாவில் பாட வாய்ப்பு தேடி வந்தார். பொறியியல் இரண்டாமாண்டு படிக்கும்போதே பாட வாய்ப்பு கிடைத்தது. ‘முகமது பின் துக்ளக்’ படத்தில் நடிகை ரமாபிரபாவின் பிறந்தநாளுக்கு ‘ஹேப்பி பர்த்டே டு யூ’ என்று பாடிக்கொண்டே அந்த காட்சியில் தோன்றுவார் எஸ்பிபி. இதுதான் அவரது முதல் அரங்கேற்றம்.

பின்னர் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, துளு என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி லட்சக்கணக்கான ரசிகர்களை தன்வசம் இழுத்துக்கொண்டவர்

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.! | Spb Birthday Today Singer Actor

எஸ்பிபி. ஏராளமான மாநில அரசு விருதுகள், இந்திய அரசின் மிக உயர்ந்த விருதான 2010 ஆம் ஆண்டுக்கான பத்மபூஷண் விருதும் இவரை வந்து சேர்ந்தது. இதுவரை தேசிய விருதினை தென்னிந்தியாவின் நான்கு மொழிகளிலும் பெற்ற ஒரே பின்னணிப் பாடகர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.

பாடகர் என்பதை தவிர நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், டப்பிங் ஆர்டிஸ்ட் என்ற பன்முக திறமை கொண்டவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.

எம்.ஜிஆரின் ’அடிமைப்பெண்’ படத்தில் தன் இளம் வயதிலேயே 70’ஸ் கிட்ஸ் மனதில் இடம் பிடித்த ஆயிரம் நிலவே வா என்ற பாடலை பாடி முதல் பாட்டிலேயே ரசிகர்களை கொள்ளையடித்த பெருமை இவருக்கே உண்டு.

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.! | Spb Birthday Today Singer Actor

இன்று ரஜினி நடிக்கும் அண்ணாத்த திரைப்படத்தில் கடைசியாக தனது குரலை பதிவிட்டு இசையாகவே மறைந்தார் எஸ்.பி.பி.

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் என்று இவர் பாடிய பாடலுக்கு ஏற்ப நம்மிடம் இசையாகவே மலர்ந்து இசையாகவே மறைந்துள்ளார்.

எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்..! இசையாய் வாழும் எஸ்.பி.பி. மலர்ந்த நாள்.! | Spb Birthday Today Singer Actor

இவர் தேகம் மறைந்தாலும் நம்மோடு இசையாகவே இன்றும் வாழ்ந்து வருகிறார். இசை உள்ள வரை இவரும் வாழ்ந்து கொண்டே இருப்பார்..