மோடியை சந்தித்த முதல்வர் ஸ்டாலின் - 3 முக்கிய கோரிக்கைகள் என்ன?
பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
மோடி ஸ்டாலின் சந்திப்பு
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தமிழக இல்லத்தில் தங்கிய முதல்வர் ஸ்டாலின், இன்று காலை 11 மணியளவில் பிரதமர் மோடியை சந்தித்தார்.
45 நிமிடம் நிகழ்ந்த இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இதில் குறித்து கோரிக்கைகள் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
3 முக்கிய கோரிக்கை
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த இனிப்பான சந்திப்பை மகிழ்ச்சியான சந்திப்பாக மாற்றுவது பிரதமர் மோடியின் கையில்தான் உள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த தேவையான மத்திய அரசின் நிதி, சமக்ர சிக்ஷா திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர் கைது செய்யப்படுவதை இலங்கை அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்ல கோரிக்கை வைத்துளேன் 3 முக்கிய கோரிக்கைகளை வைத்துள்ளேன்.
இதை கவனமாக கேட்டு கொண்ட பிரதமர் மோடி நிறைவேற்றி தருகிறார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.