நெக்ஸ்ட் தேர்வை கைவிட வேண்டும் - பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

M K Stalin Narendra Modi NEET
By Vinothini Jun 13, 2023 08:36 PM GMT
Report

மத்திய அரசு நெக்ஸ்ட் தேர்வு அறிமுகப்படுத்துவதை கைவிட கோரி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.

நீட் தேர்வு

இந்திய அளவில் நீட் தேர்வு, இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேர்வாக நடந்து வருகிறது.

stalin-letter-to-modi-about-neet-exam

மேலும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உள்ள நெக்ஸ்ட் என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கடிதம் எழுதியுள்ளார்.

கடிதம்

இதனை தொடர்ந்து, அந்த கடிதத்தில், "நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நெக்ஸ்ட்டு தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும்,

stalin-letter-to-modi-about-neet-exam

மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும். இதனால் நெக்ஸ்ட் தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும்" என்றம் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.