தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - முதலமைச்சர் மத்திய அமைசருக்கு கடிதம்

M K Stalin Government of Tamil Nadu Government Of India Sri Lanka Navy
By Thahir Feb 24, 2023 01:48 AM GMT
Report

தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தொடர் தாக்குதல்களை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதினார்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் 

நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரை கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர், அங்கிருந்த தமிழக மீனவர்கள் 6 பேர் மீதும் திடீரென இரும்பு கம்பிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

மேலும், கடலில் மீன்களுக்காக வைத்திருந்த வலைகளையும் இலங்கை கடற்படையினர் அறுத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இலங்கை கடற்படையின் இந்த தாக்குதலில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனைகளில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் 

போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தற்போது இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவு துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் - முதலமைச்சர் மத்திய அமைசருக்கு கடிதம் | Sri Lanka Navy Attack On Tamil Nadu Fishermen 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், தமிழக மீனவர்கள் மீதான தொடர் தாக்குதல்களை தடுக்க இருநாட்டு தூதரகமும் அதற்கான வழிமுறைகள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் அதில் முதலமைச்சர் வலியுறுத்தி உள்ளார்.