பெருவெள்ள பணியில் உடன்பிறப்புகள் இமை துஞ்சாது செயலாற்றினர்..! முதல்வர் பாராட்டு..!!
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு களம் எதுவாயினும் கம்பீரமாக நடப்போம் என்று கட்சி தொண்டர்களுக்கு முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் பாராட்டு
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்! DMK IT Wing WarRoom அமைத்து உதவும் பணிகள் உரிய இடங்களைச் சென்றடைய உறுதுணையாகியது!
நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான செயல்பாடுகளுக்குமான சான்றிதழாகப் பாராட்டுகள் குவிந்தன!
தம்பி அழைக்கின்றார்
பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் நமது DravidianModel-ஐ நாடு முழுக்கக் கொண்டு சேர்க்கவுள்ள மக்களவைத் தேர்தல் களத்தை நோக்கி நம்மை ஆயத்தப்படுத்திட, மாநில உரிமை மீட்பு முழக்கத்துடன் டிசம்பர் 24 அன்று சேலத்தில் தமது தலைமையில் நடைபெறும் dmk_youthwing இரண்டாவது மாநில மாநாட்டில் பங்கேற்க அழைக்கின்றார் அன்புத் தம்பி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
களம் எதுவாயினும் கம்பீரமாக நடப்போம்! இளைஞரணி மாநாடு வெல்லட்டும்!! அடுத்தடுத்த வெற்றிகளுக்கு அடித்தளமாகட்டும்!!! என்று முதல்வர் முக ஸ்டாலின் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
உடன்பிறப்புகள் அனைவரும் #CycloneMichaung துயர் துடைக்கும் பெரும் பணியில், வெள்ளம் வடிந்து இயல்புநிலை திரும்பும் வரை இமை துஞ்சாது செயலாற்றினர்!@DMKITwing #WarRoom அமைத்து உதவும் பணிகள் உரிய இடங்களைச் சென்றடைய உறுதுணையாகியது!
— M.K.Stalin (@mkstalin) December 17, 2023
நம் உண்மையான உழைப்புக்கும் அக்கறையான… pic.twitter.com/Zm2bErlheJ