காமன்வெல்த்... பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

M K Stalin India Commonwealth Games
By Sumathi Aug 09, 2022 06:23 AM GMT
Report

காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற வீரர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் 

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இந்தியா சார்பில் 106 வீரர்கள், 104 வீராங்கனைகள் என மொத்தம் 210 பேர் 16 விளையாட்டுகளில் கலந்து கொண்டனர்.

காமன்வெல்த்... பதக்கம் வென்றவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு! | Stalin Congratulated Medal Winners Of Commonwealth

போட்டியின் நிறைவில் இந்தியா பதக்க பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது. இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் உள்பட 61 பதக்கங்களை வென்று வரலாறு படைத்துள்ளது. குறிப்பாக மல்யுத்த போட்டியில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

ஸ்டாலின் வாழ்த்து 

ரவி குமார் தயா, வினேஷ் போகத், நவீன் ஆகியோர் தங்கம் வென்றனர். இதேபோல் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்து வரும் பிவி சிந்து, சரத் கமல், அமித் பங்கால், நிகத் சரீன் உள்ளிட்டோர் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர்.

இந்த நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ,ஆடவர் ஹாக்கி அணி,சரத் கமல், பி.வி.சிந்து, லக்ஷயா சென் உள்ளிட்ட வீரர்களுக்கு மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.