முத்தமிழ் அறிஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயர்மாற்றம் - ஸ்டாலின் அறிவிப்பு!
தமிழ்நாட்டில் அரசு வழங்க உள்ள மகளிர் உரிமை தொகை திட்டம் குறித்து ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மகளிர் உதவி தொகை
தமிழக முதலமைச்சர் அளித்த தேதல் வாக்குறுதிகளில் ஒன்று தான் மகளிர் உதவி தொகை திட்டம். இந்த திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். இதனை செயல்படுத்துவதற்காக இளம்பகவத் என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் நியமனம் செய்யப்பட்டார்.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக முதல் கட்டமாக 7000 கோடி ரூபாயை நடப்பு பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது. அத்துடன் ஒரு கோடி மகளிருக்கு இந்த உரிமை தொகையை வழங்க திட்டமிட்டுள்ளது.
ஆலோசனை கூட்டம்
இதனை தொடர்ந்து, சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அணைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இணைந்து இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
தற்பொழுது இந்த திட்டத்தை முத்தமிழ் அறிஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என்ற பெயரில், அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்க உள்ளதாக கூறியுள்ளார்.