முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதி, என்னாச்சு? - வெளியான பகீர் தகவல்!
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சருக்கு மருத்துவ பரிசோதனை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சருக்கு உடல் சோர்வு காரணத்தால் பரிசோதனைக்கு சென்றுள்ளார்.
மேலும், இவர் இரைப்பை தொடர்பான மருத்துவ நிபுணர்களை சந்தித்து பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் கூறப்படுகிறது.
மருத்துவமனை அறிக்கை
இந்நிலையில், இந்த தகவல் குறித்து அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில், “வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை (இன்று) காலை வீடு திரும்புவார்” எனவும் மருந்துவமனை நிர்வாகம் அறிவித்து இருந்தது.
இந்த நிலையில் பரிசோதனைகள் முடிந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.