தண்டனை கடுமையாக்கப்படும்; மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் அதிரடி!

M K Stalin Tamil nadu
By Swetha Jun 29, 2024 02:47 AM GMT
Report

தமிழ்நாடு மதுவிலக்கு சட்டம் 1937-ல் திருத்த மசோதா நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுகிறது.

 மதுவிலக்கு

நடப்பு ஆட்சியின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில், காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவகாரத்தில் பேசிய பா.ம.க உறுப்பினர் ஜி.கே.மணி, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்தார்.

தண்டனை கடுமையாக்கப்படும்; மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் அதிரடி! | Stalin Announces Prohibition Of Alcohol Bill

அப்போது பேசிய அவர், “ இங்கு, கூட்டத் தொடர் தொடங்கியதிலிருந்து கடந்த சில நாள்களாகவே கள்ளக்குறிச்சி விவகாரத்தைத் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இதைத் தான் மீண்டும் உறுப்பினர் கோ.க.மணி இங்கே எடுத்துப் பேசத் தொடங்கியிருக்கிறார்.

மதுவிலக்கு என திமுக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை - கனிமொழி எம்பி விளக்கம்

மதுவிலக்கு என திமுக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை - கனிமொழி எம்பி விளக்கம்

ஸ்டாலின் அதிரடி

என்னைப் பொறுத்தவரை, உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருள்களைக் காய்ச்சுதல், விற்பனை செய்வது போன்ற குற்றங்களுக்கான தண்டனை போதுமானதாகவும் கடுமையாகவும் இல்லை.இதுபோன்ற குற்றங்களுக்கு வழங்கப்படும் தண்டனையை கடுமையாக்கி,

தண்டனை கடுமையாக்கப்படும்; மதுவிலக்குச் சட்ட திருத்த மசோதா - முதல்வர் ஸ்டாலின் அதிரடி! | Stalin Announces Prohibition Of Alcohol Bill

இக்குற்றங்களை முற்றிலும் தடுக்க முதற்கட்டமாக, தமிழ்நாடு மது விலக்குச் சட்டம், 1937-ல் திருத்த மசோதா ஒன்று நாளை சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்ற விவரத்தை இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.