மதுவிலக்கு என திமுக தேர்தல் அறிக்கையில் கூறவில்லை - கனிமொழி எம்பி விளக்கம்
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு ஏற்படுத்துவோம் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறவில்லை என திமுக எம்பி கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.
கனிமொழி எம்பி
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மது கடைகளை மூடுவோம் என கனிமொழி தேர்தல் பொது பிரச்சாரம் செய்தார். தற்போது எங்கே மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன? என எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மதுவிலக்கு கூறவில்லை
இந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள திமுக எம்பி கனிமொழி திமுக ஆட்சிக்கு வந்தால் பூரண மது விலக்கு என தேர்தல் வாக்குறுதியில் கூறவில்லை மது விற்பனையை குறைப்பதாகத்தான் கூறினோம் என கனிமொழி எம்பி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் ஈரோடு கிழக்கு தேர்தல் குறித்து அவர் கூறுகையில் எதிர்க்கட்சியினர் பல திசைகளில் பிரிந்து கிடக்கின்றது என்றும் அனைவரும் இணைந்தாலும் திமுகவுக்கு தான் வெற்றி என்றும் அவர் கூறினார்.