அரசியல் சாசன சட்டத்தை மாற்ற துடிக்கிறது பாஜக - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

M K Stalin DMK BJP Lok Sabha Election 2024
By Karthick Apr 14, 2024 08:11 AM GMT
Report

இந்திய வரலாற்றில் மிக முக்கியமான தேர்தலை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

முதல்வர் பதிவு

நாட்டின் மக்களவை தேர்தல் நெருங்கி இருக்கும் நிலையில், தேர்தல் களம் பரபரக்கிறது. முதல் கட்ட தேர்தல் நடக்க இன்னும் ஒரு வாரக்காலமே இருக்கும் நிலையில், கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமடைந்துள்ளன.

stalin-accuses-bjp-of-changing-indian-constituency

இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு,

சிலரைச் சில காலம் ஏமாற்றலாம் - எப்போதும் முடியாது - மு.க.ஸ்டாலின்

சிலரைச் சில காலம் ஏமாற்றலாம் - எப்போதும் முடியாது - மு.க.ஸ்டாலின்

புரட்சியாளர் அம்பேத்கர் ஏற்றிவைத்த அரசியல்சட்டம் எனும் ஒளியைச் சுடர் மங்காமல் பாதுகாக்க வேண்டியது நாட்டு மக்கள் அனைவரது கடமை!

பா.ஜ.க. எனும் பேரழிவு, அரசியல்சட்டத்தை மாற்றத் துடிக்கிறது!

stalin-accuses-bjp-of-changing-indian-constituency

நாட்டை இருநூறு ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் செல்ல கோரப் பசியுடன் திட்டங்கள் தீட்டி வருகிறது!

சமத்துவச் சமுதாயத்தை உறுதி செய்யப் புத்துலக புத்தர் புரட்சியாளர் அம்பேத்கரின் அறிவாயுதத்தைத் துணைக் கொள்வோம்!