சிலரைச் சில காலம் ஏமாற்றலாம் - எப்போதும் முடியாது - மு.க.ஸ்டாலின்
சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் பதிவிட்டுள்ளார்.
முக ஸ்டாலின் பதிவு
தேர்தல் நடைபெற இன்னும் ஒரு வார காலமே இருக்கும் சூழலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அப்பதிவு வருமாறு,

புகழ்பெற்ற Lokniti CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
அதில், 27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும், 23% பேர் விலைவாசி உயர்வு என்றும், 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும், ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும் கூறியுள்ளனர்.

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம்,
புகழ்பெற்ற @LoknitiCSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது.
— M.K.Stalin (@mkstalin) April 12, 2024
அதில்,
27% பேர் #Unemployment-தான் முக்கியப் பிரச்சினை என்றும்,
23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,
55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில்… pic.twitter.com/q6Ss80u5P6
தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள்.
'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!
Bigg Boss 10: முதல் குறும்படத்தை போட்டு வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்! அதிரடி காட்டிய விஜய்சேதுபதி Manithan
பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு IBC Tamil
ஷிரந்தி ராஜபக்சவுக்கு பயணத் தடை...! விமான நிலையத்திலேயே கைதாகும் அபாயம் - சிக்கலில் மகிந்த IBC Tamil