முகத்தில் அழகுக்காக சர்ஜரி - ரகசியம் உடைத்த ஸ்ருதிஹாசன்!
முகத்தில் ‘சர்ஜரி' செய்துகொண்டதாக பரவிய செய்திக்கு நடிகை ஸ்ருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார்.
ஸ்ருதிஹாசன்
7-ம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன். இந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர். ஹிந்தி தெலுங்கு என பிஸியாக நடித்து வந்த ஸ்ருதிஹாசன்,

பிரபலாஸூடன் சலார், பாலகிருஷ்ணாவுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில், சமீபத்தில் ஸ்ருதிஹாசன் உடல்நிலை குறித்து பல்வேறு விதமான செய்திகள் பரவத் தொடங்கின.
முகத்தில் சர்ஜரி
அதற்கு அவர் வீடியோ ஒன்றை பதிவிட்டு பிசிஓஎஸ் பாதிப்பு உள்ளது. நலமாகவே இருக்கிறேன் என பதில் அளித்து முற்றுபுள்ளி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்ருதிஹாசன் தனது முகத்தில் சர்ஜரி செய்து கொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகிய வண்னம் இருந்தது.

ஆனாலும் இது பற்றி அவர் எந்த கருத்தும் கூறாமலேயே இருந்து வந்தார். தற்போது அவர் இதுகுறித்து, "நான் எனது மூக்கில் 'சர்ஜரி' செய்து கொண்டது உண்மைதான். எனது மூக்கில் ஒரு சமயம் பலத்த அடிபட்டு விட்டது. இதற்காக நான் சிகிச்சை மேற்கொண்டேன்.
அப்போது எனது மூக்கை அழகாக மாற்ற வேண்டும் என்பதால் சர்ஜரி செய்து கொண்டேன்" என தெரிவித்துள்ளார்.
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
மரண தண்டனையை இரத்து செய்ய அழுத்தம் ...! அனோஜன் மீது நடந்த தாக்குதல்: சிறைக்கு விரையும் தூதுவர் IBC Tamil
தாலி கட்டுறேனு சொல்லி 1000 முத்தங்கள்.. பிக்பாஸ் முத்துக்குமரன் மீது பெண் பரபரப்பு குற்றச்சாட்டு! Manithan