திடீரென இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோவில் கோபுரம் - பெரும் அதிர்ச்சியில் மக்கள்!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் கோபுரத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஸ்ரீரங்கம்
உலகளவில் இரண்டாவது பெரிய விஷ்ணு கோவில் ஸ்ரீரங்கம். வைணவவர்களின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையானது. இந்தக் கோவிலின் கிழக்குவாசல் நுழைவு வாயில் கோபுரத்தின் மற்றும்
இரண்டாவது நிலைகளில் மேற்கூரை பூச்சு இடிந்து விழும் நிலையில் விரிசல் ஏற்பட்டு எப்போது வேண்டுமானாலும் இடிந்து விடும் நிலையில் காணப்பட்டது. இதனால் மோசமான நிலையில் உள்ள கோபுரம் வழியாக பக்தர்கள் உள்ளே செல்லும் நிலை இருந்து வந்தது.
விபத்து
அதனால், பக்தர்கள் தொடர்ந்து அதனை சரிசெய்ய கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் எந்த முயற்சிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில் விரிசல் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1.50 மணிக்கு அந்த பகுதி சுவர் இடிந்து விழுந்துது. கோயில் நடை சாத்தப்பட்டு பக்தர்கள் யாரும் இல்லாததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.