6 ஆயிரம் கோடியை ஊழியர்களுக்கு தானம் செய்த தமிழக தொழிலதிபர் - யார் இவர்?

Tamil nadu
By Sumathi Nov 08, 2023 04:39 AM GMT
Report

தனது சொத்தை ஊழியர்களுக்கு தானம் செய்த தமிழக தொழிலதிபர் குறித்த தகவல் கவனம் ஈர்த்துள்ளது.

ஸ்ரீராம் நிதி நிறுவனம்

பிரபல நிதி நிறுவனங்களுள் ஒன்று ஸ்ரீராம் நிதி நிறுவனம். ஸ்ரீராம் குழுமத்தின் தற்போதைய சொத்து மதிப்பு 6,210 கோடி ரூபாய்.  தமிழகத்தில் ஒரு பணக்கார குடும்பத்தில் பிறந்த ஆர்.தியாகராஜன்.

sriram-finance

ஸ்ரீராம் சிட்ஸ் நிறுவனத்தை உருவாக்கியபோது அவருக்கு வயது 37. 20 ஆண்டுகளில் தனது நிறுவனத்தை இந்தியாவின் முன்னணி நிதி நிறுவனங்களுள் ஒன்றாக உயர்த்தினார்.

வயதை குறைக்க இப்படி டயட்டா? இரவு உணவை காலை 11 மணிக்கே முடிக்கும் தொழிலதிபர்!

வயதை குறைக்க இப்படி டயட்டா? இரவு உணவை காலை 11 மணிக்கே முடிக்கும் தொழிலதிபர்!



சொத்து தானம்

சாதாரண மக்களுக்கு குறைந்த வட்டியில் கடன்களை வழங்குவதன் மூலமும், அத்தகைய கடன் உண்மையில் பாதுகாப்பானதாகவும் லாபகரமானதாகவும் இருக்கும் என்பதை நம்பினார். ஒரே ஆண்டில் 35 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்து, குறிப்பிடத்தக்க பங்கு விலை வளர்ச்சியை அடைந்தது. 86 வயதான இவரின் கார் மதிப்பு சுமார் 4 லட்சம் தானாம்.

sriram-finance-thiyagarajan

சொந்தமாக இவரிடம் செல்போன் கூட கிடையாதாம். செல்போனை கவனச் சிதைவாக கருதியுள்ளார். சென்னையில் சாதாரண சிறிய வீட்டில்தான் வசிக்கிறார். இதற்கெல்லாம் மேல், தனது குழும சொத்துக்களை தன்னிடம் பணிபுரியும் குறிப்பிட்ட ஊழியர்களின் பெயருக்கு மாற்றி எழுதி வைத்துள்ளார். இந்த தகவல் தற்போது பலரால் கவனம் பெற்று வருகிறது.